free hit counter script

Saturday, July 29, 2006

வலையோசை கலகலவென... வலையொலிபரப்பு (Podcasting) - பகுதி 3

இந்தப் பகுதியில் கணிணி வலையொலி திரட்டிகள் (Desktop Pod-Catchers) பற்றி பார்க்கலாம்.

கணிணி வலையொலி திரட்டிகள் (Desktop Pod-Catchers):
கணிணி வலையொலி திரட்டிகள் என்பது சில குறிப்பிட்ட மென்பொருள்கள். இந்த வகை மென்பொருள்களை உங்கள் கணிணியில் நிறுவிவிட்டு, குறிப்பிட்ட வலைத்தள முகவரியைக் கொடுத்துவிட்டால் (எந்த முகவரியைக் கொடுப்பது என்பதை விரைவில் சொல்கிறேன்) அந்த வலைத்தளத்தில் எவ்வப்போது மாறுதல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் புதிய வலையொலி நிகழ்ச்சிகளை தன்னாலேயே தரவிறக்கம் செய்துகொள்ளும். நீங்கள் அந்த மென்பொருளைத் திறந்தோ அல்லது வின் ஆம்ப் (winamp) அல்லது விண்டோஸ் மீடியா பிளேயர் (Windows Media Player) போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தியோ அந்த நிகழ்ச்சிகளைக் கேட்கவேண்டியதுதான். உங்களிடம் iPod, Creative Zen போன்ற எந்த mp3 பிளேயர் இருந்தாலோ அல்லது mp3 வசதியுள்ள செல்பேசி இருந்தாலோ இந்த நிகழ்ச்சிகளை அவற்றில் இறக்கிக் கொண்டு எங்கு சென்றாலும் கேட்கலாம். நான் முதலில் சொன்னது போல் iPod இருந்தால் மட்டுமே கேட்கமுடியும் என்பதில்லை. ஏனென்றால் அந்த நிகழ்ச்சிகள் mp3 வடிவிலேயே இருக்கும்.

இந்த வகை வலையொலி திரட்டிகளில் உள்ள செட்டிங்ஸ் மூலம், புதிதாக வரும் நிகழ்ச்சிகளை உடனடியாக தரவிறக்கம் செய்ய வேண்டாம் என்று குறித்து வைத்துவிட்டால் உங்களுக்கு வேண்டிய நிகழ்ச்சிகளை மட்டும் தரவிறக்கம் செயதுகொள்ளலாம். அல்லது எல்லா நிகழ்ச்சிகளையும் தரவிறக்கம் செய்துவிட்டு, வேண்டாத நிகழ்ச்சிகளை அழித்துவிடலாம்.

சாதகம்:
1. தன்னாலேயே புதிய நிகழ்ச்சிகளை தரவிறக்கம் செய்ய முடியும்
2. சில மென்பொருள்களைப் பயன்படுத்தி mp3 பிளேயருக்கு தன்னாலேயே மாற்றிவிட முடியும்
3. சில மென்பொருள்களில் அதிலேயே நிகழ்ச்சிகளைக் கேட்கும் வசதியும் உள்ளது.

பாதகம்:
1. கணிணியில் இணைய இணைப்பு எப்போதும் இருக்கவேண்டும்.
2. ஒரு கணிணியில் தரவிறக்கம் செய்ததை நேரடியாக மற்ற கணிணியில் பார்க்க முடியாது. (வலையிணைப்போ, வெளிவன் தகடு இருந்தால் அன்றி)

இத்தகைய மென்பொருள்களும் அவற்றை தரவிறக்கம் செய்யும் தளங்களும்:

1. ஜூஸ் (juicereceiver.sourceforge.net)
2. ஃபையர் ஆண்ட் (www.fireant.tv)
3. டாப்ளர் (www.dopplerradio.net)
4. நிமிக் (www.nimiq.nl)
5. யாஹூ மியூசிக் எஞ்ஜின் (podcasts.yahoo.com)
6. ஐடியூன்ஸ் (www.apple.com/itunes)

இவை அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது.

இந்த தளங்களில் சென்று உங்களுக்குத் தேவையான் வகை வலையொலிபரப்புகளைத் தேடி தொடர் உறுப்பினராக (subscriber) பதிவு செய்துகொள்ளலாம்.

எந்த்வொரு வலையொலித் தளங்களுக்குப் போனாலும் அங்கு
இது போன்ற ஒரு குறியீடு இருக்கும். அதன் பின்னணியில் ஒரு XML பக்க முகவரி இருக்கும். அதைப் பயன்படுத்தியும் கேட்கலாம்.

உ.ம்:
www.tamilpodcaster.com

இந்த முகவரியில் சென்று நீங்கள் தமிழ் நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். அல்லது

http://feeds.feedburner.com/NenjilNirpavai என்ற முகவரியை இணைய வலையொலி திரட்டியிலோ, கணிணி வலையொலி திரட்டியிலோ கொடுத்து தொடர் உறுப்பினர் ஆகலாம்.

முயற்சி செய்து பாருங்களேன்...

Monday, July 24, 2006

'சின்னக்குயில்' சித்ரா குரலில் - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'சின்னக்குயில்' சித்ரா பாடிய சில பாடல்களைக் கேட்கலாம்...


பாடல் : சின்னக்குயில் பாடும் பாட்டு...
பாடியவர் : சித்ரா
படம் : பூவே பூச்சூட வா
இசை : இளையராஜா


பாடல் : நானொரு சிந்து காவடிச்சிந்து...
பாடியவர் : சித்ரா
படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா


பாடல் : குழலூதும் கண்ணனுக்கு...
பாடியவர் : சித்ரா
படம் : மெல்லத் திறந்தது கதவு
இசை : எம் எஸ் வி, இளையராஜா


பாடல் : இன்னிசை பாடி வரும்...
பாடியவர்கள் : சித்ரா
படம் : துள்ளாத மனமும் துள்ளும்
இசை : எஸ் ஏ ராஜ்குமார்


பாடல் : கண்ணாமூச்சி ஏனடா...
பாடியவர்கள் : சித்ரா
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை : ஏ ஆர் ரகுமான்


பாடல் : கண்ணாளனே...
பாடியவர் : சித்ரா
படம் : பம்பாய்
இசை : ஏ ஆர் ரகுமான்


http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

மேகம் கொட்டட்டும்... நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரின்
இன்றைய தலைப்பு: மேகம் கொட்டட்டும்...!

மழையினூடே ஆடிப்பாடும் சில பாடல்களை வலையேற்றியிருக்கிறேன்

பாடல் : துளித்துளியாய்...
பாடியவர்கள் : ஹரிஹரன், ஸ்வர்ணலதா
படம் : பார்வை ஒன்றே போதும்
இசை : பரணி


பாடல் : மழையே மழையே...
பாடியவர்கள் : சுஜாதா
படம் : ஜூன் ஆர்
இசை : சரத்


பாடல் : சின்ன மேகமே
பாடியவர் : சித்ரா, ரகீப்-ஆலம், கல்பனா
படம் : மழை
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்


பாடல் : சின்னச்சின்ன மழைத்துளிகள்...
பாடியவர்கள் : எம் ஜீ ஸ்ரீகுமார்
படம் : என் சுவாசக் காற்றே
இசை : ஏ ஆர் ரகுமான்


பாடல் : சில் சில் சில் மழையே...
பாடியவர்கள் : சின்மயி, சத்யன்
படம் : அறிந்தும் அறியாமலும்
இசை : யுவன் சங்கர் ராஜா


பாடல் : மேகம் கொட்டட்டும்...
பாடியவர் : எஸ் பி பி
படம் : எனக்குள் ஒருவன்
இசை : இளையராஜா


http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டுவிட்டு நிறை-குறைகளை எழுதுங்கள்...

Saturday, July 22, 2006

ஆனந்தம்... ஆனந்தம்... நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரின்
இன்றைய தலைப்பு: ஆனந்தம்... ஆனந்தம்...

ஆனந்தம் என்ற தலைப்பில் சில பாடல்களை வலையேற்றியிருக்கிறேன்

பாடல் : ஆனந்தம்...ஆனந்தம்...
பாடியவர்கள் :
படம் : கண்ணுக்கு கண்ணாக
இசை : எஸ் ஏ ராஜ்குமார்


பாடல் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்...
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்
படம் : பூவே உனக்காக
இசை : எஸ் ஏ ராஜ்குமார்


பாடல் : ஆனந்தம் தேன் சிந்தும் பூஞ்சோலையில்...
பாடியவர் : மலேசியா வாசுதேவன், எஸ் ஜானகி
படம் : மண் வாசனை
இசை : இளையராஜா


பாடல் : ஆனந்த ராகம்...
பாடியவர்கள் : தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
படம் : பன்னீர் புஷ்பங்கள்
இசை : இளையராஜா


பாடல் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி...
பாடியவர்கள் :
படம் : ரோஜா மலரே
இசை : ஆதித்யன்


பாடல் : ஆனந்தக்குயிலின் பாட்டு...
பாடியவர் : அருண்மொழி, சித்ரா, மலேசியா வாசுதேவன்
படம் : காதலுக்கு மரியாதை
இசை : இளையராஜா

http://www.tamilpodcaster.com

அல்லது...






நிறை-குறைகளை எழுதுங்கள்...

Thursday, July 20, 2006

குஸ்தி - வடிவேலு நகைச்சுவை - நகைச்சுவை நேரம்

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நகைச்சுவை நேரம் வலையொலித் தொடரில்
இன்று 'குஸ்தி்' படத்திலிருந்து வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளின் ஒலித்தொகுப்பை வலையேற்றியிருக்கிறேன்...

கேட்டு ரசியுங்கள்...

http://www.tamilpodcaster.com

அல்லது...

Wednesday, July 19, 2006

கண்மணியே பேசு... நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரின்
இன்றைய தலைப்பு: கண்மணியே பேசு...

கண்மணி என்ற தலைப்பில் சில பாடல்களை வலையேற்றியிருக்கிறேன்

பாடல் : கண்மணியே காதல் என்பது...
பாடியவர்கள் : எஸ்பிபி, எஸ் ஜானகி
படம் : ஆறிலிருந்து அறுபது வரை
இசை : இளையராஜா


பாடல் : கண்மணியே பேசு...
பாடியவர்கள் : எஸ்பிபி, எஸ் ஜானகி
படம் : காக்கிச்சட்டை
இசை : இளையராஜா


பாடல் : கேளடி கண்மணி...
பாடியவர் : எஸ்பிபி
படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை : இளையராஜா


பாடல் : கண்மணி நீ வரக்காத்திருந்தேன்...
பாடியவர்கள் : கேஜே யேசுதாஸ், உமா ரமணன்
படம் : தென்றலே என்னைத் தொடு
இசை : இளையராஜா


பாடல் : கண்மணி நில்லு...
பாடியவர்கள் : எஸ் என் சுரேந்தர், சசிரேகா
படம் : ஊமை விழிகள்
இசை : மனோஜ்-கியான்


பாடல் : வா வா கண்மணி...
பாடியவர் : எஸ்பிபி, எஸ் ஜானகி
படம் : இன்னிசை மழை
இசை : இளையராஜா

http://www.tamilpodcaster.com

அல்லது...




நிறை-குறைகளை எழுதுங்கள்...

வலையோசை கலகலவென... வலையொலிபரப்பு (Podcasting) - பகுதி 2

இந்தப் பகுதியில் வலையொலி திரட்டிகள் (Pod-Catchers) பற்றி பார்க்கலாம்.

வலையொலி திரட்டிகள் (Pod-Catchers) :

வலையொலிபரப்புகளைக் கண்டுபிடித்து கேட்பதற்கு வலையொலி திரட்டிகள் பயன்படுகிறது. இவை முக்கியமாக இரண்டு வகைப்படும்.

1. இணைய வலையொலி திரட்டிகள் (Web Pod-Catchers)
2. கணிணி வலையொலி திரட்டிகள் (Desktop Pod-Catchers)

இணைய வலையொலி திரட்டிகள் (Web Pod-Catchers):
இணைய வலையொலி திரட்டிகளில், நீங்கள் அந்த இணைய தளத்துக்குச் சென்று தேவையான வலையொலிகளைத் தேடி தேர்ந்தெடுத்து கேட்கலாம். உங்களுக்குத் தேவையான வலையொலி நிகழ்ச்சிகளை உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் உங்களுக்குப் பிடித்த அந்த நிகழ்ச்சியில் புதிதாக ஏதேனும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு நீங்கள் அவ்வபோது அந்த தளத்துக்குச் சென்று பார்க்கவேண்டும்.

சாதகம்:
1. இணைய இணைப்புள்ள எந்தக் கணிணியிலும் உங்களுக்குப் பிடித்த வலையொலிபரப்பைக் கேட்கலாம்.

2. தேவைப்பட்டால் தவிர தரவிறக்கம் செய்யவேண்டிய அவசியமில்லை.

பாதகம்:
1. தரவிறக்கம் செய்ய வேண்டுமானால் ஒவ்வொரு சுட்டியாகச் சென்று சேமிக்க வேண்டும்.
2. புதிய சேர்க்கைகளைப் பார்வையிட ஒவ்வொரு முறையும் அந்த தளத்துக்குச் செல்ல வேண்டும், அல்லது தளத்தை திறந்தே வைத்திருக்கவேண்டும்.

சில இணைய வலையொலி திரட்டிகள்:

1. பாட்நோவா (www.podnova.com)
2. ஓடியோ (www.odeo.com)
3. நெட் வைப்ஸ் (www.netvibes.com)
4. யாஹூ (my.yahoo.com)
5. கூகுள் ரீடர் (www.google.com/reader)
6. விண்டோஸ் லைவ் (www.live.com)

வரும் பகுதியில் கணிணி வலையொலி திரட்டிகள் பற்றியும், வலையொலி திரட்டிகளைப் பயன்படுத்தி எப்படி வலையொலியைக் கேட்பது என்பது பற்றியும் பார்க்கலாம்.

Tuesday, July 18, 2006

வலையோசை கலகலவென... வலையொலிபரப்பு (Podcasting) - பகுதி 1

முன்னுரை:

இந்த இதழிலிருந்து வலையொலிபரப்பு (Podcasting) பற்றி எனக்குத் தெரிந்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாமென்று இருக்கிறேன்.

வலையொலிபரப்பு (Podcasting) என்பது இணைய இணைப்புள்ள எவரும் செய்யக்கூடிய, பயன்படுத்தக்கூடிய ஒரு ஒலி ஊடகம். ஆங்கிலத்தில் இதன் பெயர், ஆப்பிள் நிறுவனத்தின் iPod மூலமே பயன்படுத்தமுடியும் என்பது போல் இருந்தாலும், உண்மையில் இதன் பயன்பாடுக்கு iPod அவசியமே இல்லை. எந்த ஒரு mp3 பிளேயரும் போதும். சொல்லப்போனால் அது கூட அவசியமில்லை. ஒரு கணிணியும், இணைய இணைப்பும் இருந்தால் போதுமானது.

வலையொலிபரப்பு என்பது உங்களால் உருவாக்கப்பட்ட, உங்களுக்காக உருவாக்கப்பட்ட வானொலி நிகழ்ச்சி. இதை இந்த நேரத்தில்தான் கேட்க வேண்டும், என்று எந்த கட்டாயமும் கிடையாது. ஒரு கணிணியும் இணைய இணைப்பும் இருந்துவிட்டால் எந்த நேரமும் கேட்கலாம். ஏதோ ஒரு mp3 பிளேயரோ அல்லது அந்த வசதியுள்ள செல்பேசியோ இருந்துவிட்டால், கணிணி கூட தேவையில்லை.

இனி வரும் பகுதிகளில், வலையொலிபரப்பை எப்படி கேட்பது, அதற்குத் தேவையான வன்பொருட்கள், மென்பொருட்கள் என்னென்ன, தேவையான வலையொலிபரப்பை எங்கு தேடுவது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Monday, July 17, 2006

ஃபாசில் - இளையராஜா இணையில் - நெஞ்சில் நிற்பவை

நண்பர்களே,

இன்றைய தீம்: ஃபாசில் - இளையராஜா இணையில் நெஞ்சில் நிற்பவை!

பாடல்கள்:

1. பூவே பூச்சூட வா...
படம்: பூவே பூச்சூட வா
பாடியவர்கள்: கேஜே யேசுதாஸ்
இசை: இளையராஜா

2. ஒரு கிளியின் தனிமையிலே...
படம்: பூ விழி வாசலிலே
பாடியவர்கள்: சித்ரா
இசை: இளையராஜா

3. பொம்முக்குட்டி அம்மாவுக்கு...
படம்: பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பாடியவர்கள்: கேஜே யேசுதாஸ
இசை: இளையராஜா

4. என்னைத்தாலாட்ட வருவாளா...
படம்: காதலுக்கு மரியாதை
பாடியவர்: ஹரிஹரன்
இசை: இளையராஜா

5. ஒரு நாள் ஒரு கனவு...
படம்: கண்ணுக்குள் நிலவு
பாடியவர்: கே ஜே யேசுதாஸ்
இசை: இளையராஜா

6. கஜூராஹோ கனவிலோர்...
படம்: ஒரு நாள் ஒரு கனவு
பாடியவர்கள்: ஹரிஹரன்
இசை: இளையராஜா

http://www.tamilpodcaster.com

அல்லது...



கேட்டுட்டு சொல்லுங்க....

சங்கர் - ஏஆர் ரகுமான் இணையில் - நெஞ்சில் நிற்பவை

நண்பர்களே,

'சங்கர் - ஏஆர் ரகுமான் இணையில்' என்ற தலைப்பில் ஒரு எபிஸோட் பதிவு செய்திருக்கிறேன்.

இதிலுள்ள பாடல்கள்:

1. என் வீட்டுத்தோட்டத்தில்....
படம்: ஜெண்டில்மேன்
பாடியவர்கள்: எஸ்பிபி,சுஜாதா
இசை: ஏஆர் ரகுமான்

2. என்னவளே அடி என்னவளே....
படம்: காதலன்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன்
இசை: ஏஆர் ரகுமான்

3. பச்சைக்கிளிகள் தோளோடு...
படம்: இந்தியன்
பாடியவர்கள்: கேஜே யேசுதாஸ
இசை: ஏஆர் ரகுமான்

4. பூவுக்குள் ஒளிந்திருக்கும்...
படம்: ஜீன்ஸ்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்,சுஜாதா
இசை: ஏஆர் ரகுமான்

5. அழகான ராட்சசியே...
படம்: முதல்வன்
பாடியவர்: எஸ்பிபி, ஹரிணி
இசை: ஏஆர் ரகுமான்

6. பூம் பூம்...
படம்: பாய்ஸ்
பாடியவர்கள்: அட்னான் சாமி, சாதனா சர்க்கம்
இசை: ஏஆர் ரகுமான்

http://www.tamilpodcaster.com

அல்லது...



கேட்டுட்டு சொல்லுங்க....

Sunday, July 16, 2006

பாட்காஸ்டிங்

சில வாரங்களுக்கு முன்பு கூகுளிக்கொண்டிருந்தபோது எதையோ தேடப்போய் கண்டுபிடித்ததுதான் இந்த வார்த்தை. முதலில் பார்த்தவுடன் சரி இது 'iPod' வைத்திருக்கும் அதிர்ஷ்டக்காரர்களுக்குத்தான் என்று ஒரு நீண்ட பெருமூச்சுடன் நகர நினைத்தாலும் iPod என்ற வார்த்தையில் இருக்கும் ஒரு கவர்ச்சி இதிலும் இருந்தது. சரி இது என்னதான்னு பார்த்துவிடலாமே என்று நுழைந்தேன். அதன் பிறகு தமிழில் ஒரு பாட்காஸ்டிங் தளம் ஆரம்பித்துவிட்டுத்தான் மறுவேலை என்ற அளவில் கொண்டுவிட்டது!

ஆரம்பித்தும் ஆகிவிட்டது...

http://www.tamilpodcaster.com --- இதுதான் அந்தத்தளம்.

சரி நம் விருப்பங்களை பகிர்ந்துகொள்ள ஒரு தளம் ஆரம்பித்தாகிவிட்டது, இந்தத்துறையில் நாள்தோறும் நடக்கும் மாற்றங்களைப்பகிர்ந்துகொள்ள வேண்டாமா...? அதற்குத்தான் இந்த வலைப்பூ!

நேரம் கிடைக்கும்போதெல்லாம் எனக்குத் தெரிந்ததை இங்கு பகிர்ந்துகொள்வேன்.

எனக்கு முன் 'ஸ்மூத்டாக்' ஒரு முன்னோட்டம் கொடுத்துள்ளார் இங்கு.


நான் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாமென்று இருக்கிறேன்.

எங்கே என் ஜீவனே...!

நண்பர்களே,

இன்று 'எங்கே என் ஜீவனே...!' என்ற தலைப்பில் ஒரு எபிஸோட் பதிவு செய்திருக்கிறேன்.

இதிலுள்ள பாடல்கள்:

1. எங்கே என் ஜீவனே....
படம்: உயர்ந்த உள்ளம்
பாடியவர்கள்: கேஜே யேசுதாஸ், எஸ் ஜானகி
இசை: இளையராஜா

2. ஒரு ஜீவன் அழைத்தது....
படம்: கீதாஞ்சலி
பாடியவர்கள்: இளையராஜா, உமா ரமணன்
இசை: இளையராஜா

3. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...
படம்: நீயா
பாடியவர்கள்: எஸ்பிபி, வாணிஜெயராம்
இசை: இளையராஜா

4. ஜீவன் எங்கே...
படம்: யுனிவர்சிட்டி
பாடியவர்: மாதங்கி
இசை: ரமேஷ் விநாயகம்

5. என் ஜீவன் பாடுது...
படம்: நீதானா அந்தக்குயில்
பாடியவர்:கேஜே யேசுதாஸ்
இசை: இளையராஜா

6. ஒரு ஜீவன்தான்...
படம்: நான் அடிமையில்லை
பாடியவர்கள்: எஸ்பிபி, எஸ்ஜானகி
இசை: இளையராஜா

http://www.tamilpodcaster.com

அல்லது...



கேட்டுட்டு சொல்லுங்க....

Monday, July 10, 2006

தமிழில் பாட்காஸ்டிங்!

நண்பர்களே,

தமிழில் பாட்காஸ்டிங் முயற்சி செய்திருக்கிறேன். இதில் உள்ள நிறை குறைகளை நீங்கள்தான் எடுத்துச்சொல்லவேண்டும்.

இணைய முகவரி : http://www.tamilpodcaster.com

உங்கள் எண்ணங்களை இங்கு பின்னூட்டமிடுங்கள். குறைகளைத்திருத்திக்கொள்ள உதவியாக் இருக்கும்.

நன்றி!