free hit counter script

Saturday, July 29, 2006

வலையோசை கலகலவென... வலையொலிபரப்பு (Podcasting) - பகுதி 3

இந்தப் பகுதியில் கணிணி வலையொலி திரட்டிகள் (Desktop Pod-Catchers) பற்றி பார்க்கலாம்.

கணிணி வலையொலி திரட்டிகள் (Desktop Pod-Catchers):
கணிணி வலையொலி திரட்டிகள் என்பது சில குறிப்பிட்ட மென்பொருள்கள். இந்த வகை மென்பொருள்களை உங்கள் கணிணியில் நிறுவிவிட்டு, குறிப்பிட்ட வலைத்தள முகவரியைக் கொடுத்துவிட்டால் (எந்த முகவரியைக் கொடுப்பது என்பதை விரைவில் சொல்கிறேன்) அந்த வலைத்தளத்தில் எவ்வப்போது மாறுதல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் புதிய வலையொலி நிகழ்ச்சிகளை தன்னாலேயே தரவிறக்கம் செய்துகொள்ளும். நீங்கள் அந்த மென்பொருளைத் திறந்தோ அல்லது வின் ஆம்ப் (winamp) அல்லது விண்டோஸ் மீடியா பிளேயர் (Windows Media Player) போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தியோ அந்த நிகழ்ச்சிகளைக் கேட்கவேண்டியதுதான். உங்களிடம் iPod, Creative Zen போன்ற எந்த mp3 பிளேயர் இருந்தாலோ அல்லது mp3 வசதியுள்ள செல்பேசி இருந்தாலோ இந்த நிகழ்ச்சிகளை அவற்றில் இறக்கிக் கொண்டு எங்கு சென்றாலும் கேட்கலாம். நான் முதலில் சொன்னது போல் iPod இருந்தால் மட்டுமே கேட்கமுடியும் என்பதில்லை. ஏனென்றால் அந்த நிகழ்ச்சிகள் mp3 வடிவிலேயே இருக்கும்.

இந்த வகை வலையொலி திரட்டிகளில் உள்ள செட்டிங்ஸ் மூலம், புதிதாக வரும் நிகழ்ச்சிகளை உடனடியாக தரவிறக்கம் செய்ய வேண்டாம் என்று குறித்து வைத்துவிட்டால் உங்களுக்கு வேண்டிய நிகழ்ச்சிகளை மட்டும் தரவிறக்கம் செயதுகொள்ளலாம். அல்லது எல்லா நிகழ்ச்சிகளையும் தரவிறக்கம் செய்துவிட்டு, வேண்டாத நிகழ்ச்சிகளை அழித்துவிடலாம்.

சாதகம்:
1. தன்னாலேயே புதிய நிகழ்ச்சிகளை தரவிறக்கம் செய்ய முடியும்
2. சில மென்பொருள்களைப் பயன்படுத்தி mp3 பிளேயருக்கு தன்னாலேயே மாற்றிவிட முடியும்
3. சில மென்பொருள்களில் அதிலேயே நிகழ்ச்சிகளைக் கேட்கும் வசதியும் உள்ளது.

பாதகம்:
1. கணிணியில் இணைய இணைப்பு எப்போதும் இருக்கவேண்டும்.
2. ஒரு கணிணியில் தரவிறக்கம் செய்ததை நேரடியாக மற்ற கணிணியில் பார்க்க முடியாது. (வலையிணைப்போ, வெளிவன் தகடு இருந்தால் அன்றி)

இத்தகைய மென்பொருள்களும் அவற்றை தரவிறக்கம் செய்யும் தளங்களும்:

1. ஜூஸ் (juicereceiver.sourceforge.net)
2. ஃபையர் ஆண்ட் (www.fireant.tv)
3. டாப்ளர் (www.dopplerradio.net)
4. நிமிக் (www.nimiq.nl)
5. யாஹூ மியூசிக் எஞ்ஜின் (podcasts.yahoo.com)
6. ஐடியூன்ஸ் (www.apple.com/itunes)

இவை அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது.

இந்த தளங்களில் சென்று உங்களுக்குத் தேவையான் வகை வலையொலிபரப்புகளைத் தேடி தொடர் உறுப்பினராக (subscriber) பதிவு செய்துகொள்ளலாம்.

எந்த்வொரு வலையொலித் தளங்களுக்குப் போனாலும் அங்கு
இது போன்ற ஒரு குறியீடு இருக்கும். அதன் பின்னணியில் ஒரு XML பக்க முகவரி இருக்கும். அதைப் பயன்படுத்தியும் கேட்கலாம்.

உ.ம்:
www.tamilpodcaster.com

இந்த முகவரியில் சென்று நீங்கள் தமிழ் நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். அல்லது

http://feeds.feedburner.com/NenjilNirpavai என்ற முகவரியை இணைய வலையொலி திரட்டியிலோ, கணிணி வலையொலி திரட்டியிலோ கொடுத்து தொடர் உறுப்பினர் ஆகலாம்.

முயற்சி செய்து பாருங்களேன்...

2 Comments:

Blogger வடுவூர் குமார் said...

நல்ல விஷயம்.
அறியப்படுத்தியதற்க்கு
நன்றி

6:14 PM  
Blogger ஞானவெட்டியான் said...

அன்பு நண்பரே,
என்னிடம் உள்ள பாடல்களை எங்கு, எப்படி வலையேற்றுவது என கூற இயலுமா(தனி மின்னஞ்சலில்)?

7:47 PM  

Post a Comment

<< Home