free hit counter script

Tuesday, July 18, 2006

வலையோசை கலகலவென... வலையொலிபரப்பு (Podcasting) - பகுதி 1

முன்னுரை:

இந்த இதழிலிருந்து வலையொலிபரப்பு (Podcasting) பற்றி எனக்குத் தெரிந்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாமென்று இருக்கிறேன்.

வலையொலிபரப்பு (Podcasting) என்பது இணைய இணைப்புள்ள எவரும் செய்யக்கூடிய, பயன்படுத்தக்கூடிய ஒரு ஒலி ஊடகம். ஆங்கிலத்தில் இதன் பெயர், ஆப்பிள் நிறுவனத்தின் iPod மூலமே பயன்படுத்தமுடியும் என்பது போல் இருந்தாலும், உண்மையில் இதன் பயன்பாடுக்கு iPod அவசியமே இல்லை. எந்த ஒரு mp3 பிளேயரும் போதும். சொல்லப்போனால் அது கூட அவசியமில்லை. ஒரு கணிணியும், இணைய இணைப்பும் இருந்தால் போதுமானது.

வலையொலிபரப்பு என்பது உங்களால் உருவாக்கப்பட்ட, உங்களுக்காக உருவாக்கப்பட்ட வானொலி நிகழ்ச்சி. இதை இந்த நேரத்தில்தான் கேட்க வேண்டும், என்று எந்த கட்டாயமும் கிடையாது. ஒரு கணிணியும் இணைய இணைப்பும் இருந்துவிட்டால் எந்த நேரமும் கேட்கலாம். ஏதோ ஒரு mp3 பிளேயரோ அல்லது அந்த வசதியுள்ள செல்பேசியோ இருந்துவிட்டால், கணிணி கூட தேவையில்லை.

இனி வரும் பகுதிகளில், வலையொலிபரப்பை எப்படி கேட்பது, அதற்குத் தேவையான வன்பொருட்கள், மென்பொருட்கள் என்னென்ன, தேவையான வலையொலிபரப்பை எங்கு தேடுவது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

2 Comments:

Blogger பிரதீப் said...

சபாஷ்.
நானும்தாங்க பாட்கேஸ்ட்-ங்கறதே ஐபாட் மட்டும் உபயோகப் படுத்துறதுன்னு தப்பா நினைச்சுட்டேன்.

இன்னும் விளக்குங்க.

3:16 AM  
Blogger கானா பிரபா said...

மிகவும் தேவையான பதிவு ஒன்று, நன்றிகள்

6:15 PM  

Post a Comment

<< Home