free hit counter script

Wednesday, July 19, 2006

வலையோசை கலகலவென... வலையொலிபரப்பு (Podcasting) - பகுதி 2

இந்தப் பகுதியில் வலையொலி திரட்டிகள் (Pod-Catchers) பற்றி பார்க்கலாம்.

வலையொலி திரட்டிகள் (Pod-Catchers) :

வலையொலிபரப்புகளைக் கண்டுபிடித்து கேட்பதற்கு வலையொலி திரட்டிகள் பயன்படுகிறது. இவை முக்கியமாக இரண்டு வகைப்படும்.

1. இணைய வலையொலி திரட்டிகள் (Web Pod-Catchers)
2. கணிணி வலையொலி திரட்டிகள் (Desktop Pod-Catchers)

இணைய வலையொலி திரட்டிகள் (Web Pod-Catchers):
இணைய வலையொலி திரட்டிகளில், நீங்கள் அந்த இணைய தளத்துக்குச் சென்று தேவையான வலையொலிகளைத் தேடி தேர்ந்தெடுத்து கேட்கலாம். உங்களுக்குத் தேவையான வலையொலி நிகழ்ச்சிகளை உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் உங்களுக்குப் பிடித்த அந்த நிகழ்ச்சியில் புதிதாக ஏதேனும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு நீங்கள் அவ்வபோது அந்த தளத்துக்குச் சென்று பார்க்கவேண்டும்.

சாதகம்:
1. இணைய இணைப்புள்ள எந்தக் கணிணியிலும் உங்களுக்குப் பிடித்த வலையொலிபரப்பைக் கேட்கலாம்.

2. தேவைப்பட்டால் தவிர தரவிறக்கம் செய்யவேண்டிய அவசியமில்லை.

பாதகம்:
1. தரவிறக்கம் செய்ய வேண்டுமானால் ஒவ்வொரு சுட்டியாகச் சென்று சேமிக்க வேண்டும்.
2. புதிய சேர்க்கைகளைப் பார்வையிட ஒவ்வொரு முறையும் அந்த தளத்துக்குச் செல்ல வேண்டும், அல்லது தளத்தை திறந்தே வைத்திருக்கவேண்டும்.

சில இணைய வலையொலி திரட்டிகள்:

1. பாட்நோவா (www.podnova.com)
2. ஓடியோ (www.odeo.com)
3. நெட் வைப்ஸ் (www.netvibes.com)
4. யாஹூ (my.yahoo.com)
5. கூகுள் ரீடர் (www.google.com/reader)
6. விண்டோஸ் லைவ் (www.live.com)

வரும் பகுதியில் கணிணி வலையொலி திரட்டிகள் பற்றியும், வலையொலி திரட்டிகளைப் பயன்படுத்தி எப்படி வலையொலியைக் கேட்பது என்பது பற்றியும் பார்க்கலாம்.

0 Comments:

Post a Comment

<< Home