free hit counter script

Sunday, August 06, 2006

எந்தன் குரல் கேட்டு...!

நண்பர்களே,

உங்களுக்கு பாடும் திறன் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் குரலில் பாடல்களை வலையொலிபரப்ப ஒரு வாய்ப்பு. இங்கு உங்கள் விருப்பத்தை பின்னூட்டமிடுங்கள் அல்லது contact@tamilpodcaster.com என்ற முகவரிக்கு உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வையுங்கள்.

உங்கள் பாடல் திரைப்படப் பாடலாகவோ அல்லது கர்நாடக இசையாகவோ இருக்கலாம். திரைப்படப் பாடலாக இருந்தால் பின்னணி இசை கரோக்கி (Karaoke) யோடு இருந்தால் நல்லது அது இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

தேர்வு செய்யப்பட்ட பாடல்கள் http://www.tamilpodcaster.com என்ற வலையொலி தளத்தில் 'எந்தன் குரல் கேட்டு...!' என்ற பகுதியில் ஒலிபரப்பாகும்.

என்ன பாட தயாராகிவிட்டீர்களா...!

0 Comments:

Post a Comment

<< Home